தண்ணீர் வடிந்தால் வெள்ளை அறிக்கை என்றால், தேங்கி இருந்தது என்ன குற்ற அறிக்கையா - பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் !!!

தண்ணீர் வடிந்தால் வெள்ளை அறிக்கை என்றால், தேங்கி இருந்தது என்ன குற்ற அறிக்கையா - பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் !!!

Oct 17, 2024 - 21:02
 0  10

மழையில் பாதிக்கபட்ட மக்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் உணவுகள் அளிக்கப்பட்டது.

சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் பா.ஜ.க சார்பில் மழையில் பாதிக்கபட்ட மக்களுக்கு மருத்துவ மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சியை சென்னை கிழக்கு மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் கென்ஸ் சௌந்த் ஏற்ப்பாடு செய்து இருந்தார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

 சிறப்பு மருத்துவ முகாமில் பா.ஜ.க தமிழிசை சவுந்தரராஜன் அவரே தனது பணியை செய்து அனைவரும் பரிசோதித்தார்.

*பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியில்*

தான் முதலில் தமிழக அரசுக்கு நன்றி சொல்வதை விட வருன பகவானுக்கு நன்றியை கூறியதோடு பின்னர்

உதயசூரியனுக்கு நன்றியை சொல்வதை விட இன்று உதித்த சூரியனுக்கு நன்றியை சொல்கிறேன் என சிரித்தபடியே .

சில இடங்களில் கழிவுநீர் உடன் மழைநீர் கலந்து ஓடியதாக மாமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள். தொலைநோக்கு திட்டம் என்ன கொண்டு வந்தார்கள். மழைக்கு பயந்து கார்களை மேம்பாலம் மீது நிறுத்தும் மக்களுக்கு என்ன தீர்வு கொண்டு வந்து உள்ளனர். 

தண்ணீர் வடிந்தால் வெள்ளை அறிக்கை என்றால், தண்ணீர் தேங்கி இருந்தது என்ன குற்ற அறிக்கையா ! என கேள்வி எழுப்பினார். 

ஏன் இதுவரை முழுமையாக மழைநீர் செல்ல கால்வாய் கட்டி முடிக்கப்படவில்லை என்றும், பிரதான சாலையில் தான் மழைநீர் வடிந்ததும்

உட்பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதாகவுவே முழுமையாக பணிகள் முடியவில்லை என குற்றம் சாட்டினார் 

மேலும் மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது என்று கேட்ட கேள்விக்கு 

தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை என போஸ்டர் அடிக்க கூடிய அவல நிலை உருவாகி உள்ளதாகவும் பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்து உள்ளதாக தன்னைத் தானே தி மு க அரசு விளம்பரம் காண்பித்து கொண்டு இருக்கின்றன என்றும் 

அரசியல் ரீதியாக வெள்ளத்தை அணுகுகிறார்கள். அறிவியல் ரீதியாக வெள்ளத்தை அணுகவில்லை என்று விமர்சனம் செய்ததோடு 

உதயநிதிக்கு விளம்பரம் மட்டுமே தேவையா என செய்தியாளர்கள் சந்திப்பில் சரமாரியான கேள்விகளை தி.மு.க அரசுக்கு எதிராக கேட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow