உதயநிதி ஸ்டாலினை கூப்பிடுவேன் : மெரினாவில் போதையில் காரில் உல்லாசமாக இருக்க வந்தவர்கள் - போலீசாரை கலாய்த்து சென்ற வீடியோ வைரல்
உதயநிதி ஸ்டாலினை கூப்பிடுவேன் : மெரினாவில் போதையில் காரில் உல்லாசமாக இருக்க வந்தவர்கள் - போலீசாரை கலாய்த்து சென்ற வீடியோ வைரல்
உதயநிதி ஸ்டாலினை கூப்பிடுவேன் : மெரினாவில் போதையில் காரில் உல்லாசமாக இருக்க வந்தவர்கள் - போலீசாரை கலாய்த்து சென்ற வீடியோ வைரல் !!!
மெரினா கடற்கரை D. 5 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
சென்னை மெரினா கடற்கரையான லுக் சாலையான மீன் மார்க்கெட் அருகே நள்ளிரவு நேரங்களில், வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக D 5 .மெரினா கடற்கரை போலீசாரான சிலம்பரசன் மற்றும் திவாகர் ஆகிய காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த போது, சென்னை வேளச்சேரியை சேர்ந்த கார் உரிமையாளரான சந்திர மோகன் என்பவரின் TN.10.AE.2500, எண் கொண்ட ஹூண்டாய் சிட்டி காரில் ஒரு பெண்ணுடன் இரவில் இருவரும் போதையிலும் தனிமையிலும் இருந்த போது கண்காணித்து வந்த D 5 , மெரினா கடற்கரை போலீசார் விசாரித்த போது பெண் உட்பட ஒரு ஆண்ணும் தள்ளாடும் படி மது போதையில் போலீசாரிடம் அநாகிருகமாக நடந்து கொண்டும்
தனக்கு உதயநிதி ஸ்டாலின் மிகவும் நெருக்கமானவர் என்றும் இதற்கு முன்பாக இருந்த பெண் ஆய்வாளர் தன்னைப் பார்த்து நடுங்கி விடுவதாகவும் மேலும் குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு சென்றது போல் ஹோண்டா சிட்டி காரை பெண் உட்பட இருவரும் காரை ஒட்டி சென்றும் திருப்பி வந்து போலீசாரை கலாய்த்தபடி உரிமையில் பேசியும், அங்கு இருக்கும் காலர்களை மோதிய படி எச்சரிக்கை விடுத்து காரை வேகமாக எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது
இந்த சம்பவம் குறித்து D 5 காவல் நிலைய காவலர்களான சிலம்பரசன் மற்றும் திவாகர் ஆகிய இருவரும் புகார் அளித்ததோடு மெரினா கடற்கரை உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் போலீசார் அநாகரிகமாக நடந்து கொண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் போலீசாரிடம் காரில் வந்த இருவரும் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த பெண் உட்பட இருவரும் அநாகரிகமாக நடந்து கொண்டு இருந்த வீடியோவை போலீசார் அமைதி காத்தபடி வீடியோவை எடுத்த மூன்று காவலர்களுக்கு பொதுமக்கள் மற்றும் போலீசார் உட்பட அனைவரும் பொறுமையை காத்தபடி இருந்ததற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?