வால்பாறை நகராட்சியை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் !!!

வால்பாறை நகராட்சியை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் !!!

Nov 30, -0001 - 00:00
 0  15
வால்பாறை நகராட்சியை கண்டித்து  மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் !!!
வால்பாறை நகராட்சியை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் !!!

வால்பாறை நகராட்சியை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் !!! 

கோவை மாவட்டம், வால்பாறையில் அ.தி.மு.க வினர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல்கந்தசாமி தலைமையில் நகரச் செயலாளர் ம.மயில்கணேசன், ஏ.டி.பி.தொழிற் சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது ஆகியோர் முன்னிலையில் சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, வாடகை உயர்வு, உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுகளை திரும்பப் பெறவும் நகராட்சி டெண்டர் பணிகளை முறையாக வழங்கவும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழில் வரியை ரத்து செய்யவும் வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர கழக துணைச் செயலாளர் எஸ்.பொன்கணேசன், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன், அவைத் தலைவர் சுடர் பாலு, மாவட்ட பேரவை இணைச் செயலாளர் நரசப்பன், நகர் மன்ற உறுப்பினர் ஜெ.மணிகண்டன் ஆடிட்டர் சண்முகவேல், ஐ.டி.விங்க் நகரச் செயலாளர் சண்முகம், வார்டு கழக செயலாளர் எம்.ஆர்.எஸ்.மோகன், நிர்வாகிகள் காய்கடை சசிகுமார், செந்தூர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்பு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு வரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow