கோவில்பட்டி பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கன மழை : ரயில்வே சுரங்க பாலம் மூடல் - சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி !!!

Oct 23, 2024 - 19:36
 0  10

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக பரலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், மாலையில் பலத்த காற்றுடன் 2 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கியது. இந்த பலத்தை மழையின் காரணமாக கோவில்பட்டி நகரில் உள்ள மெயின் ரோடு பசுவந்தனை சாலை, ரயில்வே நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமின்றி கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது . போக்குவரத்து காவலர்கள் பாலத்தின் இரு பகுதிகளும் தடுப்புகளை வைத்து வாகனங்களை மாற்றி அனுப்பி வைத்தனர். கோவில்பட்டி நகர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். மாலையில் பள்ளி, கல்லூரி விட்டதால் மாணவர்கள் வீடு செல்ல முடியாமல் பரிதவித்தனர். பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி கழுகுமலை, காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow