கோவையில் போட்டி, போட்டுக் கொண்டு அதிவேகத்தில் இயக்கும் தனியார் பேருந்துகள் : நடு ரோட்டில் நிறுத்திய பயணிகள் இறக்கியதால் அவதி
கோவையில் போட்டி, போட்டுக் கொண்டு அதிவேகத்தில் இயக்கும் தனியார் பேருந்துகள் : நடு ரோட்டில் நிறுத்திய பயணிகள் இறக்கியதால் அவதி

கோவையில் போட்டி, போட்டுக் கொண்டு அதிவேகமாக இயக்கும் தனியார் பேருந்துகள் : நடு ரோட்டில் நிறுத்திய பயணிகள் அவதி - விபத்துகள் நடந்து அசம்பாவிதம் நடந்தால் முன்பு நடவடிக்கை எடுக்கப்படுமா ? ....
கோவை, காந்திபுரத்தில் நகரப் பேருந்து நிலையம், வெளியூர் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் போன்ற நான்கு பேருந்து நிலையங்கள் உள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து கோவை மாநகரப் பகுதிகளுக்குள் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு , உரிய நேரத்தில் இயக்குவதில் தகராறு போன்று நாள்தோறும் ஓட்டுநர் மற்றும் நடத்திய இடையே பல தகராறுகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் இன்று வடவள்ளியில் இருந்து காந்திபுரம் செல்ல 1 சி எண் கொண்ட கே.எம்.எஸ் மற்றும் பாலாஜி மணி என்ற இரண்டு தனியார் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்குவதில் ஏற்பட்ட தகராறில் தடாகம் சாலையில் காந்தி பார்க் அருகே நடுரோட்டில் பேருந்துகளை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு பயணிகளிடம் வாங்கிய டிக்கெட்டை திருப்பி கொடுத்து இறக்கிவிட்டனர். இதனால் பல மணி நேரம் பேருந்தில் காத்திருந்து பாதி வழியில் இறக்கி விடப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர் பயணிகள் .
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதுகாப்பான பயணத்தை பயணிகள் மேற்கொள்ள முடியும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
What's Your Reaction?






