கிராமத்தில் அனைவருக்கும் தீபாவளி : 400 மாணவர்களுக்கு தீபாவளி பரிசு - கொண்டாடி மகிழ்ந்த காரை ஊராட்சி மன்ற தலைவி !!!
கிராமத்தில் அனைவருக்கும் தீபாவளி : 400 மாணவர்களுக்கு தீபாவளி பரிசு - கொண்டாடி மகிழ்ந்த காரை ஊராட்சி மன்ற தலைவி !!!

கிராமத்தில் அனைவருக்கும் தீபாவளி : 400 மாணவர்களுக்கு தீபாவளி பரிசு - கொண்டாடி மகிழ்ந்த காரை ஊராட்சி மன்ற தலைவி !!!
காரை கிராமத்தில் அனைவருக்கும் தீபாவளி என்ற நோக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கனவு இந்தியா குழுமத்துடன் இணைந்து உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட காரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக வள்ளி செல்வம் அவர்கள் தொடர் மக்கள் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் கனவு இந்தியா தொண்டு நிறுவனம் அதன் ப்வுண்டர் நடராஜன் ராமன் வழிகாட்டுதலில் வழக்கறிஞர்கள் சதீஷ்குமார்,பூபாலன், சீனிவாசன்,கபிலன், ஆகியோர் ஒருங்கிணைப்பில்
சமூக ஆர்வலர்கள் 700க்கும் மேற்பட்டோர் பங்களிப்பில் 4000 குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்க நிதி திரட்டப்பட்டு அனைவருக்கும் தீபாவளி என்ற உயரிய நோக்கத்தை அடையும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் மழையூர், பாகவல்லி பகுதிகளிலும், அதே போன்று காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் பகுதியிலும், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட காரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மை ஹார்வெஸ்ட் நிறுவனம் சார்பாக இனிப்பு மற்றும் காரமும், பைன் கேன் நிறுவனத்தின் தியாகு அவர்கள் ஏற்பாட்டில் பட்டாசு ஆகியவையும் நேத்து அனைவருக்கும் தீபாவளி என்ற நோக்கில் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம், துணை தலைவர் கவிதா டில்லி பாபு,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜ் நாயக்கர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அனுசியா, துணை தலைமை ஆசிரியர் குருராஜ், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி, துணை தலைமை ஆசிரியர் கோபி கண்ணன்,
எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அப்துல் கலாம் நண்பர்கள் ஆகிய பங்கேற்று வழங்கப்பட்டது.
தீபாவளி பரிசை பெற்றுக் கொண்ட குழந்தைகள் பரிசு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து உற்சாகத்துடன் பள்ளியிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
மேலும் காரை கிராமத்தில் தொடர் மக்கள் பணியாற்றி வரும் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்லும் அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தொடர் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு சிறந்த நிர்வாகத் திறமையுடன் அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் அவர்களின் மக்கள் பணி உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
What's Your Reaction?






