வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு !!!

வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு !!!

Oct 19, 2024 - 17:29
Oct 19, 2024 - 17:30
 0  55
வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 வயது  குழந்தை உயிரிழப்பு !!!
வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு !!!

வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு !!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஊசிமலை எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளியாக கடந்த ஓராண்டாக பணி புரிந்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐனூல் அன்சாரி என்பவர் தனது குடும்பத்துடன் ஊசிமலை மட்டம் வாழைப்பாடி என்ற பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் குடியிருப்பு அருகே விளையாடிக் கொண்டு இருந்த அவரின் மகள் அப்சர் கத்தூன் வயது 4 என்பவரை அருகே உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் இருந்து வெளி வந்த சிறுத்தை திடீரென தாக்கி கல்விச் சென்று உள்ளது இதைப் பார்த்த அவரது அம்மா சத்தம் போட்டு அலற அருகே இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து குழந்தையை தேடிய போது சுமார் 700 மீட்டர் தூரத்தில் உள்ள புதரில் குழந்தை உயிரிழந்து இருந்ததாகவும் தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் உயிரிழந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் பழனி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இச்சம்பவம் வால்பாறை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow