வீட்டிற்கு விருந்தாளியாக வந்து உணவு அருந்த வந்து செல்லும் தேசிய பறவை மயில்
வீட்டிற்கு விருந்தாளியாக வந்து உணவு அருந்த வந்து செல்லும் தேசிய பறவை மயில்
வீட்டிற்கு விருந்தாளியாக வந்து உணவு அருந்த வந்து செல்லும் தேசிய பறவை மயில் : குகன் என்று பெயர் வைத்து அழைக்கும் கோவையைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் !!!
திருச்சி, ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் சுப்பிரமணியம். இவர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் முன்னாள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது இவர் கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
வடவள்ளி அதனை சுற்றி உள்ள மருதமலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில் ஏராளமான தேசிய பறவை மயில்கள் உள்ளது. விலங்குகள் மீது பாசம் கொண்ட சந்திரசேகர் சுப்பிரமணியம் தனது வீட்டிற்கு வரும் தேசிய பறவையான ஆண் மயில் ஒன்றை முருகனின் வாகனம் என்பதால் குகன் என்று பெயர் வைத்து பாசத்தோடு வீட்டிற்குள் அழைத்து உணவு அளித்து வருகிறார். தினமும் தொகையை ஆட்டிக் கொண்டு அவரது வீட்டிற்கு வரும் அந்த தேசிய பறவையான மையில் அவர் அளிக்கும் கோதுமை போன்ற உணவுகளை விரும்பி சாப்பிட்டு செல்கிறது. இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களே ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
What's Your Reaction?