நான்கு பெண்கள் தீக்குளிக்க முயற்சி : தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை !!!
நான்கு பெண்கள் தீக்குளிக்க முயற்சி : தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை !!!
நான்கு பெண்கள் தீக்குளிக்க முயற்சி : தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை !!!
சொத்துக்களை தனது சகோதரன் அபகரிக்க முயற்சிப்பதாக தாசில்தாரிடம் பலமுறை புகார் தெரிவிக்கும் நடவடிக்கை இல்லை என புகார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் இ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகளான பூபதி, கண்ணாமணி, நாகலட்சுமி, லட்சுமி இவர்களின் பூர்வீக சொத்தை இவர்களது சகோதரன் அபகரிக்க முயற்சிப்பதாகவும், சொத்தின் பட்டாக்களில் தங்களது பெயர்களை சேர்க்க வேண்டும் என தாசில்தார் மற்றும் வட்டாட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் தங்களை அலைக்கழித்து வருவதாகவும், மேலும் தங்களிடம் விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் தங்களுக்கு சேர வேண்டிய சொத்துக்களை மீட்டு தராமல் தங்கள் சகோதரனுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களுக்கு எதிராக செயல்படுவதாக புகார் தெரிவித்து. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கிற்கு எதிரே 4 பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களிடம் கோரிக்கையை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அழைத்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் மக்களின் குறைகளை கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அரங்கிற்கு வெளியே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
What's Your Reaction?