தீபாவளி பண்டிகை: போக்குவரத்தை சீர் செய்ய நாளொன்றுக்கு 350 காவலர்கள் நியமனம் - கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி !!!

கோவை நவ இந்தியா பகுதியில் மதியம் 12 மணியளவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் போக்குவரத்தை சீர் செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், வாகன நிறத்த பகுதிகளை அதிகமாக கண்டறிந்து, வாகனங்கள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வராமல் இருக்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில், அதிக காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
தீபாவளி தொடர்பாக, தற்பொழுது வரை எந்த குற்ற சம்பவங்களும் நடைபெறவில்லை எனவும் பட்டாசு கடைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
உரிமம் இல்லாமல் ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக்கு மட்டும் நாளொன்றுக்கு 350 போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அது தவிர பிற பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
What's Your Reaction?