வீடு புகுந்து அச்சுறுத்தும் ஆண் குரங்கு : வனப் பகுதியில் விட வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை !!!
வீடு புகுந்து அச்சுறுத்தும் ஆண் குரங்கு : வனப் பகுதியில் விட வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை !!!

வீடு புகுந்து அச்சுறுத்தும் ஆண் குரங்கு : வனப் பகுதியில் விட வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை !!!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி பூர கொட்டகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரங்கு கூட்டம் இருந்து வந்தது. அந்த பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிச்சைக்காரர்களிடம் உணவு தின்பண்டங்களை வாங்கி தின்று வந்த அந்த கூட்டம், ஒரு நாள் திடீரென மாயமானது. அதில் தப்பிய ஒரு ஆண் குரங்கு மட்டும் அந்தப் பகுதிகளிலேயே தங்கி இருக்கிறது. இந்த ஆண் குரங்கு தற்பொழுது ஆண்டாள் கோவில் கோபுரங்களில் ஏறி அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளுக்குள், சமையல் அறைக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுப்பதும், அந்த வழியை செல்லும் பொது மக்களிடம் கையிலும் பையிலும் வைத்து இருக்கும் உணவு பொருட்களை குறி பார்த்து பறித்து, பின்னர் உயர்ந்த கட்டிடங்களுக்குள் சென்று போக்கு கட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குரங்கின் சேட்டை மாட வீதி, கந்தாடைத் தெரு, ரத வீதிகள், மஞ்சப்பூத் தெரு, முடுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் இப்பகுதி பொதுமக்கள் இந்த குரங்கை வனத் துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டு குரங்கின் அட்டகாசத்தில் இருந்து தங்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
What's Your Reaction?






