தமிழகத்தில் 2026 - ல் அ.தி.மு.க. ஆட்சி அமையும் : தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு !!!
தமிழகத்தில் 2026 - ல் அ.தி.மு.க. ஆட்சி அமையும் : தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு !!!

தமிழகத்தில் 2026 - ல் அ.தி.மு.க. ஆட்சி அமையும் : தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு !!!
தமிழகத்தில் 2026 - ல் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று தர்மபுரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார்.
தர்மபுரி நகர அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகர அவை தலைவர் அம்மா வடிவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்று பேசினார். இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகர துணை செயலாளர்கள் அறிவாளி, சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பலராமன், வேல்முருகன், நிர்வாகி டாக்டர் ஆர். அசோகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாநில அமைப்பு செயலாளருமான செம்மலை, முன்னாள் அமைச்சரும் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார்கள்.
*ஆட்சி அமையும்*
இந்த கூட்டத்தில் செம்மலை பேசுகையில் :-
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை மக்கள் இயக்கமாக உருவாக்கினார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா கட்டிக் காத்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. கட்டுக் கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. சாதி மதங்களைக் கடந்த அனைத்து தரப்பு மக்களுக்குமான இயக்கமாகும். 2 தேர்தல்களில் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்று வெற்றி பெற்ற சிறப்பு அ.தி.மு.க.விற்கு மட்டுமே உண்டு. தி.மு.க. கூட்டணி அமைக்காமல் தேர்தலில் இதுவரை வென்றதில்லை. வருகிற 2026 - ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்பார். இந்த வெற்றியை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.
வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க அனைத்து கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களப் பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், வக்கீல் அணி மாநில நிர்வாகி அசோக்குமார், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், மோகன், பழனிசாமி, சங்கர், கோவிந்தசாமி, அண்ணா பணியாளர் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.
What's Your Reaction?






