கை தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விழாவில் - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு !!!
கை தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விழாவில் - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு !!!
கை தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விழாவில் - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு !!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்து உள்ளார்.
மேட்டூர் அருகே மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து இந்திய நெசவாளர்கள் நலச் சங்கம் சார்பில் சிறந்த நெசவாளர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த 100 நெசவாளர்களை கௌரவித்து நினைவு பரிசு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து வட பத்ரகாளியம்மன் திருக்கோவில், ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆகிய திருக்கோவிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார் .
முன்னதாக மேச்சேரியில் பகுதியில் ஸ்ரீசௌடேஸ்வரி தெருவில் உள்ள நெசவாளர் கைத்தறி கூடத்தில் பார்வையிட்டார். மேச்சேரி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதால் அவர் செல்லும் அனைத்து வழிகளிலும் காவல் துறையினர் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து நாளைய தினம் பெரியார் பல்கலைக் கழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு 23 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு முனைவர் பட்ட ஆய்வு நிறைவு செய்து உள்ள 288 மாணவர்கள், பெரியார் பல்கலைக் கழக துறைகள் மற்றும் இணைவுபெற்ற கல்லூரிகளில் அறிவியல் நிறைஞர் முதுகலை, இளங்கலை பட்டங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவர்களுக்கு தங்க பதக்கத்துடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிக்க உள்ளார்.
இதன் காரணமாக சேலம் ஓமலூர், மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
What's Your Reaction?