இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியோடு சேர்க்க நினைக்கும் தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் !!!
இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியோடு சேர்க்க நினைக்கும் தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் !!!
இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியோடு சேர்க்க நினைக்கும் தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் !!!
தருமபுரி மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தருமபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி ஊராட்சியை இணைக்க துடிக்கும் தி.மு.க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இலக்கியம்பட்டி ஊராட்சியை நகராட்சியோடு சேர்க்கும் முடிவை தி.மு.க அரசு கைவிட வேண்டும், இலக்கியம்பட்டி ஊராட்சியை நகராட்சியோடு இணைக்கும் பட்சத்தில் வீட்டு வரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை வரி ஆகியவை பொதுமக்கள் அதிகமாக வரி கட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் வேலை நிறுத்தப்படும் என்று தெரிவித்து தி.மு.க அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர் வெற்றிவேல், கழக விவசாய அணி செயலாளர் டி.ஆர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.ஜி.எஸ் சிவப்பிரகாசம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, சேலம் மண்டலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பிரசாத், தே.மு.தி.க மாவட்ட பொருளாளர் சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?