டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாளை : கல்லூரி மாணவர்கள் ரத்ததான முகாம் !!!

டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாளை : கல்லூரி மாணவர்கள் ரத்ததான முகாம் !!!

Oct 19, 2024 - 14:37
Oct 19, 2024 - 14:38
 0  6
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாளை : கல்லூரி மாணவர்கள் ரத்ததான முகாம் !!!
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாளை : கல்லூரி மாணவர்கள் ரத்ததான முகாம் !!!

 டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாளை : கல்லூரி மாணவர்கள் ரத்ததான முகாம் !!!

 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு கோவில்பட்டி உண்ணாமலை தொழில் நுட்பக் கல்லூரி, உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அக்னி சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை ஆகியோர் இணைந்து ரத்ததான முகாமினை கல்லூரி வளாக அரங்கில் வைத்து நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதாரத் துறை நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், மற்றும் மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் முத்துசாமி, ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார சுகாதாரத் துறை மேற்பார்வையாளர் கருணாநிதி மற்றும் வட்டார மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ரத்த தான முகாமினை உண்ணாமலை தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர். ரவீந்திரன் மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் அண்ணாமலைசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். மருத்துவர். தேவசேனா தலைமையில் மருத்துவக் குழுவினர் மற்றும் செவிலியர்கள் குருதியை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டனர். மேலும் முகாமில் சுகாதார துறை ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் அய்யலுச்சாமி அரசு மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பாளர் சேவியர், உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அக்னி சிறகுகள் சமூக சேவை நிர்வாக உறுப்பினர் முத்து மாரியப்பன், மற்றும் உண்ணாமலை தொழில் நுட்பக் கல்லூரியின் உதவி பேராசிரியர் மகாராஜன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் தாமாக முன் வந்து ரத்த தானம் வழங்கிச் சிறப்பித்தனர் தொடர்ந்து குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் நினைவு பரிசுகளும் வழங்கி பாராட்டினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow