முழுமையாக நிரம்பிய கிருட்டிணகிரி அணை : கால்வாய் மூலம் பாசன நீரை ஏரிகளுக்கும் நிரப்பிட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை !!!
முழுமையாக நிரம்பிய கிருட்டிணகிரி அணை : கால்வாய் மூலம் பாசன நீரை ஏரிகளுக்கும் நிரப்பிட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை !!!

முழுமையாக நிரம்பிய கிருட்டிணகிரி அணை : கால்வாய் மூலம் பாசன நீரை ஏரிகளுக்கும் நிரப்பிட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை !!!
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பந்தாரஅள்ளி ஊராட்சியில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. மழைநீர் வரத்தின்றி வறண்டு கிடக்கும் கீழ்சவுளுப்பட்டி ஏரி, மண்ணாடிப்பட்டி (பந்தாரஅள்ளி) ஏரி, வெள்ளாளன் ஏரி, பெத்தானூர் ஏரி, நடுக்கொட்டாய் ஏரி, முள்ளனூர் ஏரி, மற்றும் கரகப்பட்டி ஏரி ஆகிய ஏரிகளுக்கு நடப்பாண்டில் (2024) முழுமையாக கிருட்டிணகிரி அணை பாசனநீரை நிரப்பித்தர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
இதன் மூலம் பந்தாரஅள்ளி ஊராட்சியில் சுமார் 1000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதியை பெறுவதோடு, இவ்வூராட்சியில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கிட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள திண்டல் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளும், பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள 8 ஏரிகளும் நீர்வரத்து ஏதுமில்லாமல் வறண்டு காணப்படுகிறது.
கிருட்டிணகிரி அணை பாசனநீரை பந்தாரஅள்ளி ஊராட்சியின் கடைக்கோடி ஏரியான முள்ளனூர் ஏரி வரையில் அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் பகிர்ந்தும், கண்காணித்தும் பாசனநீர் வழங்கிடுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் மேல்பெண்ணையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் அவர்களுக்கும் கடந்த 31-07-2024 அன்று கோரிக்கை விண்ணப்பம் நேரில் சென்று வழங்கப்பட்டது.
தற்போது இன்று (16-10-2024) கும்பாரஅள்ளி ஊராட்சியில் உள்ள கொள்ளுப்பட்டி ஏரிக்கு பாசனநீர் வந்து நிரம்பிய பின், வந்துக்கொண்டு இருக்கிறது. அங்கிருந்து மொட்டலூர் ஏரி நிரம்பி, சாதிநாயக்கன்பட்டி, பாறையூர், குட்டூர் ஏரிகள் நிரம்பியதும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள திண்டல் ஏரிக்கு அடுத்ததாக பாசனநீர் வரவேண்டும். அங்கிருந்து பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிகளுக்கு பாசனநீர் செல்ல வேண்டியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் குறைவான புயல் மழையே பெய்ததால் இங்குள்ள ஏரிகளுக்கு மழைநீர் சென்று தேங்கவில்லை. ஆகையால் பல ஏரிகள் நீரின்றி வறண்டே காணப்படுகின்றன. மேலும் கிருட்டிணகிரி அணை தற்போது 52 அடி கொள்ளளவு முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் மிகையாக அணைக்கு வரும் மழைநீர் முழுதும் தென்பெண்ணை ஆற்றிலேயே திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் வலதுபுறக் கால்வாயில் திண்டல் ஏரிக்கு திறந்து விடப்பட்டுள்ள பாசனநீரின் அளவை அதிகரித்து கால்வாயில் விடவேண்டும். அப்போது தான் திண்டல் ஏரி நிரம்பி அங்கிருந்து பந்தாரஅள்ளி ஊராட்சியில் உள்ள கடைக்கோடி ஏரியான முள்ளனூர் ஏரி வரை பாசனநீர் சென்று நிரம்பும் என்று ஊராட்சி பொதுமக்கள் மற்றும் பந்தாரஅள்ளி ஊராட்சி ஏரிப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?






