வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தேனி மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் !!!

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தேனி மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் !!!

Oct 15, 2024 - 12:27
 0  14

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாவட்டம் தோறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது 

இந்த நிலையில் தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட சமூக நலத் துறை ஆணையர் லல்லி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு உள்ளது பாதுகாப்பு உபகரணங்கள் செயல்பாடுகளில் உள்ளதா ? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழையின் அளவு குறித்து கட்டுப்பாட்டறைக்கு உடனடியாக தகவல்கள் தெரிவிக்கும் சென்சார் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்து அது குறித்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர் 

பின்னர் பங்களாமேடு பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மழை நீர் பாதிப்பு ஏற்பட்டு சாலை துண்டிப்பு மற்றும் மண் சரி உள்ளிட்ட பாதிப்புகளை தடுப்பதற்கு மணல் மூட்டைகள், இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கின்றதா என ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து தேனி தாலுக்கா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி வடகிழக்கு பருவ மழை காலங்களில் மக்கள் பாதிக்கப்படாமல் பொதுமக்கள் மழையின் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார் 

இந்த ஆய்வு நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் அரசு மருத்துவமனை, தீயணைப்புத் துறை, என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சென்று வட கிழக்கு பருவ மழை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow