தேசிய அளவில் பிளையிங் கிக் போட்டி : தங்கப் பதக்கம் வென்று பழனியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனை

தேசிய அளவில் பிளையிங் கிக் போட்டி : தங்கப் பதக்கம் வென்று பழனியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனை

Oct 25, 2024 - 08:22
 0  43
தேசிய அளவில் பிளையிங் கிக் போட்டி : தங்கப் பதக்கம் வென்று பழனியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனை
தேசிய அளவில் பிளையிங் கிக் போட்டி : தங்கப் பதக்கம் வென்று பழனியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனை

தேசிய அளவில் பிளையிங் கிக் போட்டி : தங்கப் பதக்கம் வென்று பழனியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனை !!!

பழனியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் ரவின் சக்கரவர்த்தி. கடந்த சில ஆண்டுகளாக பிளையிங் கிக் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற பிளையிங் கிக் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டார். பத்து வயதுக்கு உட்பட்ட 30 கிலோ எடை பிரிவில் நடந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் டெல்லி, ஹரியானா, மத்திய பிரதேஷ், பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தங்கப் பதக்கம் வென்று வந்த சிறுவன் ரவின் சக்கரவர்த்தியை பெற்றோர்கள் ஆசிரியர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow