தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் போஸ்டர் விவகாரம் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக காவல் துறையிடம் தேசிய முன்னேற்ற கழக புகார் மனு !!!

தன்னை தானே விளம்பரம் படுத்திக் கொள்ள அரசியல் ஆக்கி வரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது தமிழக காவல் துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் ஜி ஜி சிவா சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் :-
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சனாதன தர்மம் குறித்து ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை தற்போது ஆந்திரா மாநிலம் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தூண்டலின் பெயரில் சனாதன தர்மம் குறித்து ஆந்திர மாநிலத்தில் கோயிலின் சுவற்றில் தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் நோட்டீசை ஒட்டியும் அனாகிரகமாக நடந்து கொண்டு வருவதும், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தின் போஸ்டரை காவி துண்டுகள் அணிந்தும் போஸ்டரை காலில் மிதித்தும் விருப்பு, வெறுப்புக்கான அரசியலை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தலைமையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவமதிப்பு செய்து உள்ளதாக எனவும், ஆந்திர மாநிலம் , தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு உள்ளே இடை மோதல் ஏற்படுத்தும் விதமான
பேச்சுக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர்
பவன் கல்யானை
கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் ஜி ஜி சிவா மனு அளித்து உள்ளார்.
மேலும் போலீசார் கைது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்பட்டால் நீதிமன்றத்தையும், நாட போவதாகவும் மேலும் தனது கழகத்தின் சார்பாக தமிழ் நாடு முழுவதும் உள்ள தனது கட்சியின் பொறுப்பாளர்கள் மூலம் ஆந்திர மாநில துணைத் தலைவர் பவன் கல்யாண் மீது கைது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை கொடுக்க உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
What's Your Reaction?