"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" : அரசு மாணவர் விடுதியில் ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் !!!
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" : அரசு மாணவர் விடுதியில் ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் !!!
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" : அரசு மாணவர் விடுதியில்
ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் !!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே
மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, புத்தகம் மற்றும் செய்தித்தாள் வாசிப்பின் நன்மைகள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்த வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, விடுதியில் அடிப்படை வசதிகள், உணவு வகைகள் மற்றும் உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டு அறிந்தார்.
இந்த ஆய்வின் போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, கயத்தார் பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஸ்வரன், கயத்தார் வட்டாட்சியர் சுந்தரராகவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?