தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி !!!

தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி !!!

Oct 24, 2024 - 17:40
 0  18
தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி !!!
தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி !!!

 தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி !!!

தர்மபுரி மாவட்ட, உணவு பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பண்டிகை கால தற்காலிக இனிப்பு, காரம் தயாரிப்பு செய்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ்கான அடிப்படை பயிற்சி தர்மபுரி ‌ராமாபோடிங் கே.ஆர்.கே. மஹால் வளாகத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் ஹோட்டல் பேக்கரி சங்க செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட நியமன அலுவலர் தன் தலைமை உரையில்,

மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்கள், பேக்கரிகள், தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தற்காலிக மற்றும் தனியார் மண்டபங்களில் வாடகை எடுத்து இனிப்பு, பலகாரம் தயாரிப்பு செய்து விற்பனை செய்யக் கூடியவர்கள் என அனைவரும் உணவு பாதுகாப்பு துறை உரிமச் சான்றிதழ் பெற்று வணிகம் செய்தல் வேண்டும் எனவும், உணவு பொருட்கள் , உணவு, இனிப்பு மற்றும் காரப் பலகார வகைகள் செய்யும் பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிப்புடன் சுற்றுப்புற சுத்தம் பராமரித்தல் அவசியம் , தயாரிப்பிடங்கள், இருப்பு வைக்கும் இடங்களில் தேவையற்ற பூச்சிகள் அண்டாமல் கண்காணிக்கவும், மேலும் தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் மூலப் பொருட்கள் தரமானதாகவும் உரிய காலாவதி நடைமுறை பின்பற்றக் கூடிய பொருள்களாகவும் இருத்தல் அவசியமாகும். தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்ட குடிநீராக இருத்தல் அவசியம். உணவுப் பொருட்கள், இனிப்பு கார தயாரிப்பில் தரமற்ற பொருட்களோ, நிற மூட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சேர்ப்பதோ, பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துவதோ, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் உபயோகப்படுத்துவதோ, அச்சிடப்பட்ட பழைய செய்தித் தாள்களில் காட்சிப்படுத்துவதோ பொட்டலம் இடுவதோ, விநியோகிப்பதோ கூடாது என எச்சரிக்கை செய்தார். 

சமையல் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமலும், உபயோகப்படுத்தி மீதமாகும் எண்ணெயை உணவு பாதுகாப்பு துறை அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய்) முகவர் இடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள விழிப்புணர்வு செய்தார்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், ஒவ்வொரு உணவு வணிக நிறுவனங்களிலும் கண்டிப்பாக முறையான பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர் ஒருவர் இருத்தல் அவசியம் என உணவு பாதுகாப்பு விதிகள் வகுக்க பட்டுள்ளதால், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது என தெளிவுபடுத்தினார். தற்போது தற்காலிக இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கான உணவு பாதுகாப்பு சான்றிதழ் தட்கல் முறையில் உடனடியாக அளிக்கப்படுகிறது என விளக்கம் அளித்தார்.

இந்திய உணவு பாதுகாப்பு துறை நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் 'இன்சைட்' பயிற்றுனர் பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சியில் இனிப்பு மற்றும் கார வகைகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவு மற்றும் அனுமதிக்கப்படாத அளவு சார்ந்து இனிப்பு, கார வகைகள் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள், வழிமுறைகள், அடங்கிய விழிப்புணர்வு புத்தகம், பிரசுரங்கள் வழங்கப்பட்டது‌.

நிகழ்வில் தர்மபுரி மாவட்ட அனைத்து பகுதிகளில் இருந்து பேக்கரி மற்றும் இனிப்பக, கார தயாரிப்பு உணவு வணிகர்கள், பேக்கரி உரிமையாளர்கள் என திரளாக 50 க்கும மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக ஓட்டல் பேக்கரி சங்க செயலாளர் வேணுகோபால் நன்றி உரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow