பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ள இருளர் சமூக மக்கள் - காலை உணவு வழங்கிய எம்.பி., எம்.எல்.ஏ - க்கள் !!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலம் அருள் ஏற்பாட்டில் 10 குடும்பங்களை சேர்ந்த 42 இருளர் சமூக மக்கள் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சேவை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு பாய், போர்வை, தலையணை, தார்பாய் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ள இருளர் சமூக மக்களை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி ஆகியோர் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்து பிரட், பிஸ்கட் மற்றும் காலை உணவினை வழங்கி மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இதில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், கட்டவாக்கம் கெளதம், ஊராட்சி செயலர் முனுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?