வனப் பகுதியில் பாலம் அமைப்பதில் தாமதம் : பொதுமக்கள் விவசாயிகள் அவதி !!!

வனப் பகுதியில் பாலம் அமைப்பதில் தாமதம் : பொதுமக்கள் விவசாயிகள் அவதி !!!

Oct 28, 2024 - 09:55
Oct 28, 2024 - 09:56
 0  21
வனப் பகுதியில் பாலம் அமைப்பதில் தாமதம் : பொதுமக்கள் விவசாயிகள் அவதி !!!
வனப் பகுதியில் பாலம் அமைப்பதில் தாமதம் : பொதுமக்கள் விவசாயிகள் அவதி !!!

 வனப் பகுதியில் பாலம் அமைப்பதில் தாமதம் : பொதுமக்கள் விவசாயிகள் அவதி !!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதிக்குள் தினமும் ஏராளமான விவசாயிகள், தோட்ட வேலை செய்பவர்கள், காவலாளிகள் இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் மூலம் சென்று வருகின்றனர். அத்திதுண்டு பகுதியில் இருந்து வனப் பகுதியை ஒட்டி அமைந்து உள்ள செண்பகத்தோப்பு ராஜபாளையம் ரோட்டில் ராக்காச்சியம்மன் கோவில் ஆர்ச் அருகில் இருந்த சேதமடைந்த தரைப் பாலங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பாலத்தை கடந்து செல்லும் ஏராளமானோர் தற்பொழுது செண்பகத்தோப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இந்த பகுதியில் கடந்து செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பாலம் கட்டுமான பணியின் போது அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. இதனால் இந்தப் பாலக் கட்டுமான பணிகளை விரைந்து கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow