கோவை மத்திய சிறை : கணவரை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுப்பு - பிளேடால் கையை அறுத்ததால் பரபரப்பு !!!
கோவை மத்திய சிறை : கணவரை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுப்பு - பிளேடால் கையை அறுத்ததால் பரபரப்பு !!!
கோவை சிறை : கணவரை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுப்பு - மத்திய பிளேடால் கையை அறுத்ததால் பரபரப்பு !!!
கோவை வ உ சி பூங்கா உள்ள கோவை மத்திய சிறையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் விசாரணை கைதி மற்றும் தண்டனை கைதியாக ஆயிரக்கணக்கானோர் சிறைத் தண்டனை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களைப் பார்க்க குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புக்கு பிறகு அனுமதி அளிப்பார்கள்.
இந்நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்கு அவரது தாய் மற்றும் மனைவி மீனம்மாள் வந்து இருந்தனர். கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஆதார் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் சரி பார்த்த பின்னர் உள்ளே பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றன. ஆனால் முத்துராஜ் மனைவி மீனம்மாள் ஆதார் அட்டையை கொண்டு வராததால் போலீசார் உள்ளே சென்று பார்க்க அனுமதி மறுத்து உள்ளனர்.
விரக்தி அடைந்த அந்த பெண் தான் மறைத்து வைத்து இருந்த பிள்ளேடால் தன்னை தானே கையை அறுத்து கொண்டாள். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து தாயுடன் அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?