செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு !!!

Oct 26, 2024 - 13:45
 0  11

தூத்துக்குடி, கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசி திருக் கல்யாண திருவிழா கடந்த 18 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை, மாலை என செண்பகவல்லி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. 

இதனை தொடர்ந்து அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை அடுத்து மேள, தாளங்கள் முழங்க, ஒயிலாட்டத்துடன் திருத்தேரோட்டம் தொடங்கியது. பக்தர்களின் கர கோஷங்களுக்கு இடையே நான்கு ரத வீதியில் இழுத்து வரப்பட்டு நிலையை அடைந்தது. இதில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர். வரும் 29 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow