கல்லறை தோட்டத்தை மீட்டு தர : கயத்தாரில் கிறித்தவ மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
கல்லறை தோட்டத்தை மீட்டு தர : கயத்தாரில் கிறித்தவ மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
கல்லறை தோட்டத்தை மீட்டு தர : கயத்தாரில் கிறித்தவ மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் !!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தார் வடக்கு தெருவில் லூர்து அன்னை கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தைச் சேர்ந்த இறை மக்களுக்கென ஆலயம் அருகில் கல்லறை தோட்டம் உள்ளது. பல ஆண்டுகளாக இறந்த கிறிஸ்தவர்கள் உடலை புதைத்து கல்லறை தினத்தில் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கல்லறை தோட்டத்தை தனி நபர் ஆக்கிரப்பு செய்ததாகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆலய பங்குத் தந்தை எரிக் ஜோ தலைமையில், அந்த ஆலயத்தினை சேர்ந்த கிறிஸ்த்துவ மக்கள் ஆலய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் ஆகியோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன கோஷமிட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் நவ 2-ம் தேதி கல்லறை தினம் வருவதால் அதற்க்குள் உரிய நடவடிக்கை எடுத்து கல்லறை தோட்டத்தை மீட்க வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
What's Your Reaction?