பெண்களை தவறாக வீடியோ எடுத்த காவலர் : பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு !!!
பெண்களை தவறாக வீடியோ எடுத்த காவலர் : பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு !!!
பெண்களை தவறாக வீடியோ எடுத்த போலீஸ்காரர் பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு !!!
கோவை சாய்பாபா காலனி பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு ஒருவர் தனது செல்போனில் அந்த வழியாக செல்லும் பெண்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த நபரை பிடித்து எதற்காக வீடியோ எடுக்கிறாய் என்று கேட்டனர். ஆனால் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சாய்பாபா காலனி போலீஸ் வைத்து ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் பாலமுருகன் என்பதும் போக்குவரத்து காவலராக பணிபுரிவதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து அதில் உள்ள வீடியோ குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
What's Your Reaction?