வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் !!!
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் !!!
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் !!!
திருப்பூர் மாநகரில் மிக கனமழை பெய்தது சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழை காரணமாக அதிகபட்ச அளவாக 9.2 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. அதிகபட்ச மழைப் பொழிவு காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது குறிப்பாக அங்கேரிபாளையம் அடுத்து உள்ள மகாலட்சுமி நகர் கவிதா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்ததாகவும், ஒவ்வொரு முறை மழை பொழிவின் போதும் வீடுகளில் மழை நீர் சூழ்வதால் கடும் அவதி ஏற்படுவதாகவும், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூர் - அங்கேரி பாளையம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கழிவு நீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்ததால் உடனடியாக சாக்கடை கால்வாய் உயர்த்தி கட்டப்படும் என அறிவித்து அதற்கான பணிகள் துவங்கும் என அறிவித்தனர். எனினும் இது நிரந்தர தீர்வு இல்லை எனவும் தங்களுக்கு முழுமையான வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
What's Your Reaction?