வடகிழக்கு பருவ மழை : தருமபுரி நகராட்சியில் அனைத்து பாதுகாப்பு உபகரனங்களும் தயார் நிலை - ஆணையாளர் தகவல் !!!

வடக்கிழக்கு கிழக்கு பருவ மழையின் காரணமாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவனதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வன்னம் அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவித்து இருந்தது. அதைத் தொடர்ந்து தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் வைக்கபட்டு இருந்த மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜனரேட்டர்கள், பொக்லைன் உள்ளிட்ட தளவாட பொருட்களை நகராட்சி ஆணையாளர் சேகர், நகர மன்ற தலைவர் லட்சுமி மாது ஆகியோர் நேரில் பார்வையிட்டு அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவிறுத்தினர். இதில் நகராட்சி ஆணையாளர் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தளவாட பொருட்களும் ஊழியர்களும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பொறியாளர் புவனேஸ்வரி, தனி அலுவலர் ராஜரத்தினம் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?