ஸ்ரீவில்லிபுத்தூர் பெய்து வரும் கன மழை : ஆறுகள், கால்வாய்களில் நீர் வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி !!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பெய்து வரும் கன மழை : ஆறுகள், கால்வாய்களில் நீர் வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி !!!

Oct 27, 2024 - 20:01
 0  43

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக இந்த பகுதிகள் முழுவதும் உள்ள கண்மாய்கள், குளங்கள் ஆகியவை நிரம்பி வழிகிறது. 

மேற்கு தொடர்ச்சி மலையில் தினந்தோறும் இரவு இடைவிடாமல் பெய்து வரும் கன மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வெள்ள நீர் காற்றாட்டு வெள்ளமாக உருமாறி பேயன் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மீன்வெட்டி பாறை வண்ணாத்திப் பாறை ஆகிய அருவிகளில் வெள்ள நீர் அருவியாக கொட்டி வருகிறது. அதேபோல் பேயன் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிவரும் காரணத்தினால் சுற்றுலா பயணிகள் படையெடுத்துச் சென்று வெள்ள நீரில் குளித்து வருகின்றனர். அதே போல் செண்பகத்தோப்பு அடர்ந்த வனப் பகுதிக்குள் உள்ள அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்கு தடை இன்றி எந்தவித கட்டுப்பாடுகள் இல்லாமல் சென்று குளித்து வருகின்றனர்.

பேயன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாய் ஆன மம்சாபுரம் அடுத்து உள்ள வாழைகுளம் கண்மாய்க்கு இரவு பகலாக நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக வாழைகுளம் கண்மாய் நிரம்பிவிடும் சூழ்நிலையில் உள்ளது. வாழைகுளம் கண்மாய் நிரம்பி வருவதால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார விவசாயிகள் பெரிதும் மகிழ்ந்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow