கோழியால் நடந்த கொலை சம்பவ வழக்கு : வாலிபருக்கு ஆயுள் தண்டனை - கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு !!!
கோழியால் நடந்த கொலை சம்பவ வழக்கு : வாலிபருக்கு ஆயுள் தண்டனை - கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு !!!
கோழியால் நடந்த கொலை சம்பவ வழக்கு : வாலிபருக்கு ஆயுள் தண்டனை - கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு !!!
கோவையை அடுத்த சூலூர் அருகே பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 32). இவர் கடந்த 2021 - ம் ஆண்டு ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த பெயிண்டரான சீனிவாசன் (55) என்பருடன் சேர்ந்து சேவல் கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வந்தார். 16-7-2021 - ம் ஆண்டு சில சேவல்கள் நோய் தாக்கி இறந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக சீனிவாசனுக்கும், சம்பத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது சம்பத்குமார் நான் கொடுத்த சேவல்களை விற்று விட்டு இறந்து போச்சு என்று பொய் சொல்கிறாயா? என்று கூறியவாறு ஆத்திரத்தில் அங்கு இருந்த குக்கர் மூடியை எடுத்து சீனிவாசன் தலைமையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் உயிரிழந்தார். இதை தடுக்க வந்த சீனிவாசனின் உறவினர் கார்த்திகேயன் (35) என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிங்காநல்லூர் போலீசார் கொலை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்த சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை உள்பட பல்வேறு விசாரணைகள் நிறைவு அடைந்தன.
இதை அடுத்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சம்பத்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு அளித்தார்.
What's Your Reaction?