லோட்டஸ் நியூஸ், தமிழகத்தின் கோயம்புத்தூர் தலைமையிடமாக கொண்டு 2012 அக்டோபர் 11 ஆம் தேதி முதல் தனது ஒளிபரப்பை தொடங்கிய ஒரு தமிழ் செய்தி செயற்கைக்கோள் சேனலாகும். இதன் அனைத்து நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக ஒளிபரப்பிக் கொண்டு, உள்ளூர் மற்றும் சர்வதேச தமிழ் மக்களை அதன் வழக்கமான பார்வையாளர்களாக பெற்றுக்கொண்டுள்ளது.
லோட்டஸ் நியூஸ் அதன் இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பை தந்து, தமிழ்நாட்டின் இளைஞர் மத்தியில் அதன் அணுகலை அதிகரித்துள்ளது.
லோட்டஸ் நியூஸ் சேனல் அதன் முழக்கமாக "உண்மை மலரட்டும்" பெற்றுள்ளது... இந்த சேனல் டாக்டர் ஜி.கே.எஸ்.செல்வகுமார் தலைவர், தலைமையிலான குழுவினால் இயங்குகிறது.
தமிழ் மொழியில் #எக்ஸ்பிரஸ்நியூஸ் அறிமுகப்படுத்திய முதல் சேனல் லோட்டஸ் நியூஸ் ஆகும். எக்ஸ்பிரஸ் நியூஸ் 30 நிமிடங்களில் பதிவுசெய்த நேரத்தில் 100 செய்திகளை வெளியிடுகிறது.
உலகின் முதல் "திருநங்கை" செய்தி அறிவிப்பாளரை லோட்டஸ் நியூஸ் சேனல் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியது.
"அகக்கண் " என்ற செய்தித் திட்டத்தையும் லோட்டஸ் நியூஸ் சேனல் அறிமுகப்படுத்தியது, அதில் சிறப்பு வாய்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் வாரம் ஒரு செய்தியை இந்நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்... உள்ளூர் முதல்.... உலக நாடுகள் வரை... அத்தனை செய்திகளும் நடுநிலையுடன்.... தமிழ் கலாச்சார மணம் கலந்து.... மக்களின் மனமாய்.... அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கண் முன் கொண்டுவரும்..... லோட்டஸ் நியூஸ் தொலைக்காட்சி....
Copyright Lotus News 2020, All Rights Reserved LotusNews